districts

img

தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி இழுத்து மாணவி சாதனை

தஞ்சாவூர், ஜூலை 4 -  தனது தலைமுடியால் சுமார் 1,410 எடையுள்ள காரை கட்டி இழுத்து 7 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத் தார்.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யைச் சேர்ந்தவர் வெங்கடேசன் - ஆஷா  தம்பதி. இவர்களது மகள் சம்யுக்தா (12),  பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு  படித்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே தனது தலைமுடியில், சுமார் 1,410 கிலோ எடையுள்ள காரைக் கட்டி  சுமார் 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10  விநாடியில் இழுத்துச் சென்று சாதனை படைத் தார். மாணவியை கடைவீதியில் நின்ற பொதுமக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.  இந்த சாதனையை, வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் அபீஸியல் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர் ஷெரிபா பதிவு  செய்தார். மாணவி சம்யுக்தா இதற்கு முன்  தனது பத்தாவது வயதில் 990 கிலோ எடை உள்ள காரை 112.2 மீட்டர் தூரத்திற்கு, ஒரு  நிமிடம் 46 நொடியில், தலைமுடியில் கட்டி இழுத்துச் சென்று, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், 8 ஆவது வயதில் ஏஷியன் புக் ஆஃப் ரெக்கார்ட் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக சாதனை நிகழ்ச்சியை மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம், பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலை வர் சண்முகப்பிரியா ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர். கராத்தே பயிற்சியாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். மாணவியின் சாதனை முயற்சியை யொட்டி காவல் உதவி ஆய்வாளர் முத்துக் குமார் தலைமையில், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.