districts

img

கும்பகோணத்தில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு வழங்கிடுக! மேயரிடம் சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை

கும்பகோணம், ஜூலை 6- கும்பகோணம் மாநக ராட்சி பகுதிகளில் வசிக்கும் முப்படை ராணுவத்தின ருக்கு சொத்து மற்றும் குடிநீர் வரி விலக்கு அளிக்க வேண் டும் என்று வலியுறுத்தி மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடந்தை மாநகராட்சி 34 ஆவது வார்டு உறுப்பினர் ஆ.செல்வம், மேயர் சரவண னிடம் மனு அளித்தார்.  அம்மனுவில், இந்திய ராணுவ படை பிரிவுகளில் துணை ராணுவ சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட படை பிரிவுகளில் பணி புரிந்த முன்னாள் ராணுவத்தினர் கும்பகோணம் மாநகர பகு திகளில் 300க்கு மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வரு கிறார்கள் இவர்களுக்கு பல மாநி லங்களிலும் தமிழக மாவட் டங்களிலும் குடியிருப்பு வீட்டு வரி, சொத்து வரி, குடி நீர் வரி உள்ளிட்ட வரி இனங்க ளுக்கு வரி விலக்கு அளிக்கப்  பட்டுள்ளது.  இதுபோன்று கும்பகோ ணம் நகராட்சி தரம் உயர்த்தப்  பட்டு மாநகராட்சியாக உயர்த் தப்பட்ட இந்த ஆண்டை நினைவு  கூரும் விதமாக முப்படை முன்னாள் ராணுவ படை வீரர்களுக்கு அவர்கள்  வசிக்கும் குடியிருப்பு களுக்கு சொத்து வரி, குடி நீர் வரிகளிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க மாமன்ற அனுமதிக்கு முன் மொழிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

;