districts

img

பட்டுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு துவக்க விழா

தஞ்சாவூர், பிப்.27 - தமிழ்நாடு வருவாய்த் துறையின் முன்னாள் அமைச்சரும், அதிமுக முன்னாள் மூத்த இணைப்  பொதுச் செயலாளருமான எஸ்.டி.எஸ் என்ற எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு துவக்க விழா பட்டுக்கோட்டையில் பிப்.25 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் சொசைட்டி சேர்மன் முகைதீன் மரைக்காயர் தலைமை வகித்தார். பட்டுக் கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ் செல்வம் வரவேற்றார். சென்னை துறை முக கண்காணிப்பு பொறியாளர் எஸ்.டி.எஸ் துரை மாணிக்கம் முன்னிலை வகித்தார்.   நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.என்.ராமச்சந்திரன், எஸ்.வி.திருஞானசம்பந்தம், சி.வி.சேகர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஓ.எம்.சாம்ப சிவம், மாவட்ட கவுன்சில் உறுப்பினர் சா.விஜய லட்சுமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மலைஅய்யன் ஆகியோர் புகழஞ்சலி உரை யாற்றினர். பட்டிமன்ற பேச்சாளர்கள் சே.மோகன சுந்தரம், ஜோ.அருள் பிரகாஷ் ஆகியோர் சொற் பொழிவாற்றினர்.முன்னதாக செண்டாங்காட் டில் அமைந்துள்ள சோமசுந்தரம் உருவச்  சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  விழாவில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி  உதவித்தொகை திட்டம், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த மாணவர் களுக்கான எஸ்.டி.எஸ் விருது வழங்கும் திட்டம், மரக்கன்றுகள் நடும் திட்டம், பிபிசி டெக்னோ கிளப், பிபிசி அலுமினி எங்கேஜிமெண்ட் திட்டம்  ஆகியவை தொடங்கப்பட்டன. அரசுப் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு கல்வி  உதவித்தொகை வழங்கப்பட்டது. அய்யா எஸ்.டி.எஸ்  பயின்ற ராஜாமடம் பள்ளி ஆதரவற்ற மாண வர் விடுதிக்கு ஒலிபெருக்கி கருவிகள்  வழங்கப் பட்டன.

;