districts

பட்டுக் கைத்தறி தொழிலுக்கான ஜிஎஸ்டியை முழுவதுமாக ரத்து செய்க! நெசவுத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

கும்பகோணம், செப்.29- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பட்டு மற்றும் நூல் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க  (சிஐடியு) மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சந்திரன், துணைத்தலைவர்கள் ராமாச்சாரி, ஆறுமுகம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜெயபால் துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை செயலா ளர் சுப்ரமணியனும், நிதி நிலை அறிக் கையை பொருளாளர் அனந்தராமனும் சமர்ப்பித்தனர். அரியலுர் மற்றும் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் துரைராஜ், கண்ணன், ஜீவபாரதி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.  மாநாட்டில், மாவட்டத் தலைவராக கே.ஆர்.செல்வம், செயலாளராக சுப்பு ராமன், பொருளாளராக கிருஷ்ணன், கெளர வத் தலைவராக என்.பி.நாகேந்திரன் ஆகி யோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்  பட்டனர் மாநாட்டில், கைத்தறி நெசவாளர் களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், மகாத்மா  காந்தி புங்கர்பீமா திட்டம் அமல்படுத்த வேண்டும். கோரா பட்டின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி முழுவதுமாக ரத்து  செய்ய வேண்டும். மழைக்கால நிவாரண மாக கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண் டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;