districts

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ராக்கெட் அறிவியல் பயிற்சி பட்டுக்கோட்டை மாணவர்கள் 35 பேர் பங்கேற்பு

தஞ்சாவூர், ஜன.30 -  தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப்  பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதன் முறையாக அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்கள் இணைய தளம் வழியாக மாண வர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி ஆன்-லைனில் பயிற்சி வகுப்பு ஜன.26 குடியரசு தினத்தன்று துவங்கி யது. இந்நிகழ்வுக்கு பள்ளிக் கல்வி ஆணை யர் நந்தகுமார் தலைமை வகித்தார். அண்ணா  பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், ரஷ்யன் மையத்தின் அறிவியல் மற்றும் கலாச் சார இயக்குனர் ஜென்னடி ருகாலிவ் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். “பிரம்மோஸ் ஏரோபேஸ்” நிறுவனத்தின் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான சிவதாணுபிள்ளை ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்பு குறித்து பேசினார்.  

 தமிழகம் முழுவதும் 500 மாணவர்க ளுக்கு இந்தப் பயிற்சி  4 கட்டமாக அளிக்கப் பட உள்ளது. விஞ்ஞானி சிவதாணுப் பிள் ளையே பயிற்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. பயிற்சியில் தமிழகத்தில் உள்ள  அரசுப் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் இடம் பெறுகின்றனர்.   இதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை கல்வி மாவட்டத்தில் பட்டுக்கோட்டை  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 20  மாணவிகள் மற்றும் மதுக்கூர் அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியின் 15 மாணவர்களும் என மொத்தம் 35 பேர் கலந்து கொள் கின்றனர். இந்நிகழ்விற்கு வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும், மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் சிவக்குமார், பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச் செல்வம்  ஆகியோர் வழங்கினர். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மதுக்கூர் ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர்களான எஸ்.சத்யா மற்றும் ஏ. பூவழகி இருவரும் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தி வருகின்றனர்.  500 மாணவர்கள் கலந்து கொள்ளும் ராக்கெட் அறிவியல் பயிற்சியின் முடிவில் சிறப்பாக செயல்படும் 50 மாணவர்கள் மட்டும்  தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவிற்கு அனுப்பப் படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;