districts

img

பழுதடைந்த தண்ணீர் பம்ப்பை சீர் செய்க! வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்

கும்பகோணம், ஜூலை 2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா ஏராகரம் ஊராட்சி 1 ஆவது வார்டில்  100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றன. இத்தெருவில் வசிப்பவர்களில் யாராவது இறந்தால், அந்த சடலத்தை அருகில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்று  புதைப்பது அல்லது எரிப்பது வழக்கம். அதுபோன்று, இரவு நேரங்களில் உயி ரிழப்பு நிகழ்ந்தால் அடக்கம் செய்வதற்கு மயானத்தில் போதுமான மின் வசதியும் இல்லை. இந்நிலையில், இறுதி காரியங் களை செய்ய, அங்கு பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கை பம்பில் தண்ணீர் எடுத்து உபயோகித்து வந்தனர். ஆனால் சுடு காட்டில் உள்ள இந்த கைபம்பு பழு தடைந்து உள்ளது. இது தொடர்பாக இரண்டு முறை ஊராட்சி  மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை  கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப் பட்டது. பலமுறை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  ஊராட்சி மன்ற அலு வலகத்தில் வாய்மொழியாக கூறியும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இந்நிலையில் அண்மையில் அந்த வார்டில் உள்ள ஒருவர் இறந்த போது, இறுதி காரியங்களுக்கு  தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் ஏற்பட்டனர். இதனால் அடிப் படை வசதிகளை செய்து கொடுக்காத ஏரா கரம் ஊராட்சியை கண்டித்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் பழமையான இயங் காத கை பம்பிற்கு மாலை அணிவித்து நூதன  போராட்டம் நடத்தினர். இதன் பிறகாவது சுடுகாட்டிற்கு மின் விளக்கும், தண்ணீருக்கான கை பம்பும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இல்லை யேல் மீண்டும் மக்களை திரட்டி தொடர்  போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

;