districts

ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்குக! ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு வலியுறுத்தல்

கும்பகோணம் ஜூன் 14 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை  ஊழியர் சங்க மாவட்ட மாநாடு கும்பகோணத் தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலை வர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கண்ணன் வரவேற் றார். மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்பு மணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.  மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி நிறை வுரையாற்றினார். வட்ட துணைத் தலைவர் எம்.சௌந்தரராஜன் நன்றியுரையாற்றினார்.  ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கி யுள்ளது போன்று, மாநில அரசு ஊழியர் களுக்கு ஜனவரி 2022 முதல் 3 சதவீத அக விலைப்படியை முன்தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும்.  தமிழக முதல்வர் தேர்தல்  வாக்குறுதியில் கூறியபடி, ஓய்வூதியர் 70  வயது முடிந்தவுடன், 10 விழுக்காடு கூடுதல்  ஓய்வூதியம் வழங்கிட உடனே அரசாணை வெளியிட வேண்டும். ஓய்வூதியர்கள் குடும்ப  ஓய்வூதியம், புதிய மருத்துவ காப்பீடு திட்டம்- 2018 கீழ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு அதற்கான செலவுத் தொகையை திரும்ப பெறுவதற்கு மாவட்ட அதிகாரம் அளிக்கும் குழுவுக்கு விண்ணப்பித்து, ஓராண்டுக்கு மேல் ஆகியும் தொகை கிடைக்கப் பெற வில்லை. இந்த விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சிகிச்சை தொகை விரைவில் கிடைக்க ஆவன செய்ய  வேண்டும். ஓய்வூதியர்களுக்கான குடும்ப  பாதுகாப்பு நிதியை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கிட மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கான கம்யூ டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 15  ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தியபோது நிறுத்தப்பட்ட 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இதுவரை வழங்கப்படாமல் உள்ள 18 மாத அகவிலைப்படியை ரொக்க மாக அளித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய தலைவராக துரைராஜ்,  செயலாளராக பக்கிரிசாமி, பொருளாளராக ராமமூர்த்தி, துணைத் தலைவர்களாக சண்முகம், சவுந்தர்ராஜ், கலைச்செல்வி, தன சேகரன் துணை செயலாளராக சாரங்கன்,  கண்ணாமணி, சேகர், சோமு, தணிக்கையாளர் களாக வைரமுடி, கிருஷ்ணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஜி.கண்ணன் உட்பட 20 பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.

;