districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பின்னவாசல் அரசுப்பள்ளியில் தாழ்வாகச் சென்ற மின்கம்பி மாற்றி அமைப்பு

தஞ்சாவூர், செப்.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பின்னவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியாலும், பள்ளி வளாகத்தில் இருக்கும் மின்மாற்றியாலும், இங்கு பயி லும் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயி ருக்கு ஆபத்து உள்ளது என கடந்த ஜூலை  15-ஆம் தேதி தீக்கதிரில் விரிவான செய்தி  வெளியாகியிருந்தது.  இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், வீரமணி, சிதம்பரம் ஆகி யோர் கூறுகையில், “மக்களை தேடி முதல்  வர் முகாமில், கல்வித்துறை அமைச்சரி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டு கின்றனர்” என செய்தி வெளியாகியிருந் தது.  மேலும், மாணவர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிரா மத்தினரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்” எனவும்  அறி வித்திருந்தனர்.  இதையடுத்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளர் ஹரிசங்கர் ஆகி யோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.  இதையடுத்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில், மின்மாற்றி பள்ளியை விட்டு  இடமாற்றம் செய்து வேறு புதிய இடத்தில் அமைக்கப்பட்டது. மேலும், பள்ளி வழி யாகச் சென்ற உயர் அழுத்த மின் கம்பிகள் இடம் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு இருந்த அச்சு றுத்தல் நீங்கியது.  நீண்ட காலமாக இருந்த பிரச்சனை யை தீர்த்து வைத்த மின்வாரியத்திற்கும், நட வடிக்கை எடுக்க காரணமாக இருந்த தீக்க திர் நாளிதழுக்கும் பின்னவாசல் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

;