districts

தீக்கதிர் செய்தி எதிரொலி நாச்சியார்கோவில் பெண்கள் பள்ளி நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லும்

கும்பகோணம், நவ.4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் உள்ள பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராமத் திலிருந்து பல்வேறு மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணித்து பள்ளிக்கு வருகின்றனர். இப்பள்ளியின் முன்பு உள்ள பேருந் தும் நிறுத்தம் இல்லாததால், ஓட்டு நர்கள் பேருந்தை நிறுத்தவில்லை. இந்நிலையில், பேருந்துகள் நிற்கா மல் சென்றதை கண்டித்து கடந்த வாரம் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த செய்தி தீக்கதிர் நாளி தழில் வெளியானது. அதனைத் தொ டர்ந்து நாச்சியார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக  அதிகாரியை தொடர்பு கொண்டு பேருந்து நின்று செல்ல வலியுறுத்தி னார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழகம் கும்பகோ ணம் கோட்டத்திலிருந்து ஒரு சுற்ற றிக்கை வெளியாகி உள்ளது. அதில், “அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கும்பகோணம், திருவாரூர் மற்றும் எரவாஞ்சேரி தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் எக்ஸ்பிரஸ் உட்பட  திருநறையூர் பெண்கள் மேல்நிலைப்  பள்ளி நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவிகளை ஏற்றி/ இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்படு கிறது. பயணிகள் மற்றும் மாணவ- மாணவிகளின் புகாரின்றி பணிபுரிந் திட வேண்டும். இது தொடர்பாக புகார் பெறப்பட்டால், தொடர்பு டைய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது  ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவிகளின் நற்செய லுக்கு முயற்சித்த நாச்சியார்கோ வில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி  மற்றும் போக்குவரத்து நிர்வாகத் திற்கு மாணவிகள் மற்றும் பெற்றோர்  நன்றி தெரிவித்துள்ளனர்.

;