districts

கோட்ட அஞ்சலக அதிகாரிகளைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.5- தினசரி சிறப்புக் கூட்டம் நடத்தி காப்பீடு, சேமிப்பு கணக்கு தொடங்க வாடிக் கையாளர்களை சேர்க்கச் சொல்லும் போக்கை கைவிட வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு தினசரி 4 மணி நேரம் வேலை என்று சொல்லி 24 மணி நேர மும் வேலை வாங்குவதையும், அஞ்சல்  நேரம் தவிர மற்ற நேரங்களில் ஊழியர்க ளுக்கு தொல்லை தருவதையும் நிறுத்த வேண்டும்.  அதிகாரிகள் ஊழியர்களை ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். முன்னறி விப்பின்றி திடீரென சிறப்பு கூட்டம் நடத்து வதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர் களை இரவு 7 மணி, 8 மணி வரை காக்க  வைப்பதை தவிர்க்க வேண்டும். அஞ்சல் ஊழி யர்கள் சிரமப்பட்டு சேர்த்த அஞ்சல் சேமிப்பு  கணக்கிற்கு பாஸ் புத்தகம் வழங்குவதை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். புதுப்பித்தல் மற்றும் முதிர்வு  அடைதல் ஆகியவற்றை தாமதப்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் சார்பில், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில பொரு ளாளர் பி.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  பட்டுக்கோட்டை செயலாளர் பி.மனோகரன், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் பட்டுக்கோட்டை செயலாளர் ஆர்.திருப்பதி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் பட்டுக்கோட்டை செயலாளர் ஏ.சோமு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

;