கும்பகோணம், ஏப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் முன்னாள் வட்டாட்சியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர குழு உறுப்பினரும் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளரும் கும்பகோணம் பகுதி தீக்கதிர் மற்றும் பாரதி புத்தகாலய பொறுப்பாளருமான ஆர்.ஆர் என்று அழைக்கப்படும் ஆர்.ராஜகோபா லனின் 75 ஆவது பிறந்த நாள் விழா, கட்சியின் கும்பகோணம் பகுதி சார்பில் கொண்டாடப் பட்டது. சிபிஎம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலா ளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் கள், ஓய்வூதியர் சங்கத்தினர், அரசு ஊழி யர்கள், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ராமன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாதர் சங்க மாநகர செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.