districts

பயிர் காப்பீட்டு திட்ட நிறுவனத்தை உடனே தேர்வு செய்ய வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 3-  குறுவை தொகுப்புத் திட்டம் தொடர்பாக விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அலு வலகத்தில், வேளாண் துறை இயக்கு நர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்  கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அதில், “தமிழக அரசின் குறுவைத்  தொகுப்பு திட்டத்தை, தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் வரவேற் கிறோம். குறுவைத் தொகுப்பு திட்ட அறி விப்பில், உர மானியம் ஒரு விவசா யிக்கு இரண்டு ஏக்கர் என அரசாணை யில் மாற்றம் செய்திட வேண்டும். இந்த  ஆண்டு குறுவை சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கு, இழப்பீடுகளை ஈடு செய்யும் வகையில், பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தை உடனே தேர்வு செய்து அறிவித்திட வேண்டும்.  நிறுவனத்தை தேர்வு செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால், குறுவை  சாகுபடிக்கு கடன் பெறும் விவசாயி கள், வங்கியில் பயிர்க் காப்பீடு செய்ய  முடியாத நிலை உள்ளது. பருவ நிலை யில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலும், பயிர் காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்வ தில் சிரமம் ஏற்படும்.  எனவே, போர்க்கால  அடிப்படையில் பயிர்க் காப்பீடு நிறுவ னத்தை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் பயிர் காப்பீட்டு  திட்டத்தை தேர்வு செய்ய இயலாத  நிலையில், மாநில அரசு சிறப்பு  திட்டத்தை அமலாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.

;