தஞ்சாவூர், மே 8 - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையில், தமிழக அரசின் நிதி நல்கையுடன் நிறுவப்பட்டுள்ள தமிழ் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் ஆய்வு இருக்கையின் சார்பாக, அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 208 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அவரது அரிய படைப்பான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், தமிழுக்கும் பிற மொழிகளுக்குமான தொடர்புகள் குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் நினைவுகூரப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். பல்கலை. பதிவாளர் (பொ) முனைவர் க.சங்கர் வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் அ.காமாட்சி விழா சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.