குடவாசல், ஏப்.28- ‘‘இளைஞர்களுக்கு வேலை கொடு’’ என்ற முழக்கத்துடன் நான்கு முனையிலிருந்து பெறப்பட்ட சைக்கிள் பேரணியின் ஒரு பகுதி யான பாண்டிச்சேரி பயணக் குழுவினர் வலங்கைமான் எல்லை ஆலங்குடி யில் புறப்பட்டு குடவாசல் எல்லை யான மணப்பறவைக்கு வியாழனன்று வந்தடைந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமை யில் சைக்கிள் பேரணியில் வந்த குழு வினர் குடவாசல் ஒன்றிய எல்லைப் பகுதியான மணப்பறவையில் இருந்து வாலிபர் சங்கத்தின் குடவாசல் ஒன்றியச் செயலாளர் கே.பகத் சிங், தலைவர் பி.குமரேசன் ஆகியோர் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் வீ.தீனதயாளன் முன்னி லையில் வாலிபர்-மாணவர் சங்கத்தின் சார்பில் அதிர்வேட்டு முழங்க சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் குடவாசல் எம்ஜிஆர் அரசு கலைக் அறிவியல் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை சார்பில் சங்கத்தின் துணை தலைவர் சூர்யா தலைமையில் கல்லூரி வாயி லில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களிடையே சைக் கிள் பேரணியின் நோக்கத்தை விளக்கி பயணக் குழுவினர் பேசினர். இதனைத் தொடர்ந்து குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமையில் ஒன்றிய செய லாளர் ஆர்.லெட்சுமி முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பேரணி யில் வரும் மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு மற்றும் பயண குழுவினருக்கு சால்வை அணிவிக்கப் பட்டது. இதில் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, எம். கலைமணி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.ஜெகதீஸ் வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக காலையில் வலங்கை மான் ஒன்றியம் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் தலைமையில் இளைஞர்களின் எழுச்சி மிக்க சைக்கிள் பேரணிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன், மாவட்டத் துணை தலைவர்கள் எஸ்.இளங்கோவன், பா.விஜய் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். வலங்கைமான் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இராதா தலைமையில் பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியம், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் டி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று குடவாசல் வரை வந்து பயணக் குழுவினரை வழியனுப்பி வைத்தனர்.