districts

img

‘வரலாற்றில் ஐயம்பேட்டை’ நூல் வெளியீடு

பாபநாசம், டிச.9 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே  அய்யம்பேட்டையில் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் எழுதிய, “வரலாற்றில் ஐயம்பேட்டை” நூல் வெளியீட்டு விழா நடந்தது.  விழாவிற்கு முன்னாள் அரசு வழக்கறி ஞர் துளசி அய்யா தலைமை வசித்தார்.

பிரதாப சாவடி ஐயா, அய்யம்பேட்டை சௌ ராஷ்ட்ரா சபைத் தலைவர் சௌந்தர்ராஜன், அய்யம்பேட்டை பட்டு சாலிய மகாசபைத் தலைவர் சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, “வரலாற்றில் ஐயம்பேட்டை” நூலை வெளியிட்டுப் பேசினார்.

முதல் நூலை முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரெங்க சாமி, ரெத்தினசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  

மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சங்கர், மானாங்கோரை ஸ்டார் லயன் இன்ஜி னீயரிங் கல்லூரித் தலைவர் மதனகோபால், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் (ஓய்வு) ஜம்புலிங்கம், டாக்டர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.  சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலை வரும், மாமன்னன் ராஜராஜன் விருது பெற்ற  வரலாற்று ஆய்வாளருமான செல்வராஜ் ஏற்புரை ஆற்றினார்.