தஞ்சாவூர், ஜூலை 6 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம் பான் டி.இ.எல்.சி பள்ளியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையாளர் எல்.குமார் உத்தரவின் பேரில், பள்ளி குழந்தைகளுக்கு, “என் குப்பை என் பொறுப்பு” என்பதை நடைமுறைப் படுத்தும் பொருட்டும், குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இப்பணியில் துப்புரவு அலுவலர் நெடுமாறன் மற்றும் துப்புரவு ஆய்வர்கள் ரவிச்சந்திரன், அறிவழ கன், ஆரோக்கியசாமி தூய்மை இந்தியா திட்ட மேற் பார்வையாளர்கள் ரோஜா, சாரதபிரியா மற்றும் பரப்பு ரையாளர்கள் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்ட னர். ஜூலை 9 சனிக்கிழமையன்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டார்.