districts

img

செறிவூட்டப்பட்ட அரிசி  உணவுகளை வழங்கி விழிப்புணர்வு

தஞ்சாவூர், ஏப்.3-  தஞ்சாவூர், ஆட்சியர் அலுவலகத்தில், செறிவூட்டப் பட்ட அரிசியால், தயார் செய்த உணவு வகைகள், பொது மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக வழங்கப்பட்டது. செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து உள்ள அச்சத்தை  போக்குவதற்காக, பொதுமக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், தஞ்சாவூர் ஆட்சியர் அலு வலகத்தில், திங்கள்கிழமை குறைதீர் கூட்டத்தின் போது,  பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்போது, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உணவு வகைகளை சாப்பிட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், புதினா சாதம், சாம்பார் சாதம்  ஆகியவை வழங்கப்பட்டது.  மேலும், இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 கலந்து தயார் செய்யப்பட்ட அரிசியை அரவை செய்து, 1:100 என்ற விகிதத்தில் கலந்து செறி வூட்டப்பட்ட அரிசி தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் ரத்த சோகையை தடுக்கலாம். ரத்த உற்பத்திக்கும், நரம்பு  மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் இந்த செறி வூட்டப்பட்ட அரிசி உதவுகிறது என விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.