districts

img

சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்: ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 20-  மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், சிறு பான்மையினர் தாக்குத லுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர். பாஜக அரசின் துணையுடன் சங் பரிவாரங்கள் உள்ளிட்ட அமைப்புகள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தும் அராஜக  தாக்குதல்களை தடுத்து  நிறுத்தவும், மதச்சார்பின் மையை காக்கவும், சிறு பான்மை மக்களின் உரிமை களை நிலை நிறுத்தவும் வலி யுறுத்தி, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு வின் சார்பில் புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் பெசன்ட் அரங்கம் முன்பு கண்டன முழக்கப் போராட் டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம். காதர் உசேன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு  சிறுபான்மை மக்கள் நலக் குழு மாநில பொதுச் செயலா ளர் எம்.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். சிபிஎம் தஞ்சை ஒன்றி யச் செயலாளர் கே.அபி மன்னன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ஐ.எம்.பாதுஷா, ஜமாத்-இ-இஸ்லாமி அப்துல் நாசர் புகாரி, மறை மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் ரெபரண்ட் பாதர் விக்டர் தாஸ், அரசு டவுன் ஹாஜி மவுலவி காதர் உசேன், அற நெறி மக்கள் கட்சி சார்லஸ், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டப் பொருளாளர் எஸ். ஞான மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் என்.குரு சாமி, மாநகரத் தலைவர் அப்துல் நசீர், மாநகரச் செய லாளர் கோஸ்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு ஸ்டான்லி பென்னி நன்றி கூறினார்.

;