districts

கும்பகோணம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே முதன்மை அதிகாரி ஆய்வு பொது வசதிகளை மேம்படுத்த கோரிக்கை மனு

கும்பகோணம், செப்.27 - கும்பகோணம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) பிரபுல்லவர்மா ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உப யோகிப்பாளர் சங்க செய லாளர் கிரி, கும்பகோணம் அனைத்து தொழில் வணிக  சங்கங்களின் கூட்டமைப்பு  செயலாளர் சத்தியநாராய ணன், நடராஜகுமார், அண்ணாதுரை, தீபக்வசந்த் உட்பட பொது சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கும்ப கோணம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடை பெறும் போது கீழ்க்கண்ட வசதிகளை மேம்படுத்த கோரி முதன்மை நிர்வாக அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனு வில், “கும்பகோணம் ரயில்  நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு வசதியாக கூடு தல் அறைகள் வேண்டும். ரயில் நிலையத்தில் வெயில் -மழை காலங்களில் பாது காப்புடன் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நடை மேடைகளி லும் டிஜிட்டல் பெட்டி வரு கைக்கான தகவல் பலகை நிறுவப்பட வேண்டும். யாத்ரி நிவாஸ் நிறுவப்பட வேண்டும். ரயில் நிலையத்தில் உள்ள கோயில் மற்றும்  மரங்களை பாதிக்காத  வண்ணம் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட வேண் டும். கும்பகோணத்தில் உள்ள சரக்கு வண்டி கள் கையாளும் வசதியை  அருகிலுள்ள திருநாகேஸ் வரம் ரயில் நிலையத்திற்கு மாற்றிவிட்டு, ரயில் நிலை யத்தின் தென்பகுதியில் கூடுதல் நுழைவு பாதை  மற்றும் புதிய நடைமேடை கள் அமைக்கப்பட வேண் டும். அனைத்து நடை மேடைகளுக்கும் செல்லும் வகையில் மின்தூக்கி அல்லது  எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மத்திய ரயில்வே அமைச் சர் அறிவித்த சுவாமி விவே கானந்தர் அருங்காட்சியகம் சிறிய கருத்தரங்க கூடத்து டன் அமைக்கப்பட வேண்டும். மேலும், அவசர மருத்துவ வசதி, பயணிகள் காத்திருக்கும் அறைகள், நவீன வசதிகளுடன் டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் உட்பட பயணிகளுக்கான பொது வசதிகளை முற்றிலும் மேம் படுத்திட வேண்டும்” கூறப் பட்டுள்ளது.

;