districts

img

கண்ணனாற்றின் கரைகளில் உடைப்பு ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை

தஞ்சாவூர், செப்.27 - தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு தினங் களாக பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க் கிழமை காலை 8 மணி நிலவரப்படி அதிக பட்சமாக கும்பகோணத்தில் 101 மி.மீட்டர், திருவிடைமருதூரில் 67 மி.மீட்டர், தஞ்சா வூர், நெய்வாசலில் தலா 39மி.மீ, குருங் குளத்தில் 16 மி.மீட்டர் என மாவட்டம் முழு வதும் பரலாக மழை பெய்தது. ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூர்,  ஒக்கநாடு கீழையூர், குலமங்கலம் ஆகிய கிராமங்கள் வழியாக செல்லும், கண்ணனாற் றில் கரைகள் உடைந்து, மழைநீர் வயல்களுக் குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் நடவு  செய்யப்பட்டிருந்த சுமார் 500 ஏக்கர் சம்பா  இளம் நெற்பயிர்கள், அறுவடைக்கு தயாராக  இருந்த குறுவை நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதேபோல பொன்னாப்பூர் கிராமத்தில்  உள்ள பொன்னேரி வடிகால் வாய்க்காலில் புதர் மண்டியிருந்ததால், மழைநீர் வடியா மல் நான்கு இடங்களில் கரைகள் உடைந்து,  மழைநீர் முழுவதும் வயல்களில் புகுந்தது. இதனால் பொன்னாப்பூர் பகுதியில் சுமார் 500  ஏக்கரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டு 20  நாட்களே ஆன இளம்நெற்பயிர்கள், சம்பா  நடவு பயிர்கள், குறுவையில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவரும், விவசாயியுமான என்.சுரேஷ்குமார் கூறுகையில்,

“கடந்த இரு தினங்களாக பெய்த மழையினால் மழைநீர் கண்ணனாற்றில் வடிந்தது. ஆனால் கரைகள் பலவீனமாக இருந்ததால் இரு  இடங்களில் கரைகள் உடைந்தன. இதனால்  தண்ணீர் வயலுக்குள் புகுந்து விளை நிலங்கள் எல்லாம் மூழ்கியுள்ளன” என்றார். அதேபோல் பொன்னாப்பூரைச் சேர்ந்த சங்கரமூர்த்தி கூறுகையில், “பொன்னேரி வடிகால் வாய்க்கால் உடைப்பு எடுத்த தால், வயலில் தேங்கிய தண்ணீர் வடிய  இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஆகும். தற்போது நேரடி நெல் விதைப்பு மற்றும் இளம்  நெற்பயிரைக் கொண்டு நடவு செய்யப்பட்ட சம்பா நாற்றங்கால் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சம்பா சாகுபடியை  தொடங்கினோம். துவக்கமே எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை பெற்றுத் தர  வேண்டும்” என்றார்.

;