districts

img

சேலம்: காது கேளாதோருக்கான சதுரங்க விளையாட்டு போட்டி

சேலம், மே 14- சேலத்தில் 12 ஆவது மாநில காது கேளாதோருக்கான சது ரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் மற் றும் சேலம் மாவட்ட காது கேளாதோர் நல சங்கம் சார்பில் சேலத்தில் 12 ஆவது மாநில காது கேளாதோருக்கான சது ரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து காது கேளாத, வாய் பேச முடியாத வீரர், வீராங்கனைகள் பங்கேற் றனர். இந்த போட்டியை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தொடங்கி வைத்தார்.  இப்போட்டி குறித்து, தமிழ்நாடு காது கேளாதோர் விளை யாட்டு சைகை மொழி பெயர்ப்பாளர் சுரேஷ் கூறுகையில், இப்போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 150க்கும்  மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 18  வயதிற்குள் மற்றும் 18 வயதிற்கு மேல் என இரண்டு பிரிவின் கீழ் நடைபெறும் இந்த போட்டி, லீக் முறையில் நடைபெறும். போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள், பஞ்சாப் மாநிலத் தில் நடைபெறும் தேசிய அளவிலான காதுகேளாதோர் சது ரங்க போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.