districts

img

நபார்டு வங்கியின் சார்பில் ரூ.7,976.82 கோடி கடன் வழங்க இலக்கு

சேலம், நவ. 28- சேலம் மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் சார்பில் ரூ.7,976.82 கோடி கடன் வழங்க நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் நபார்டு வங்கி யின் சார்பில் வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.  ராமன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நபார்டு வங்கியின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான சேலம் மாவட்ட வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் வெளியிட்டார். இதன் பின்னர்  ாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்ததாவது, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு) 2021-22-ஆம் ஆண்டிற் கான சேலம் மாவட்டத்தின் வளம் சார்ந்த வங்கி கடன் ரூ.7 ஆயிரத்து 976.82 கோடியாக நபார்டு வங்கி நிர்ணயித்துள்ளது. இது இந்த வருடத்திற்கான (2020-21) கடன் திட்டத்தை காட்டிலும் 4.97 சதவிகி தம் கூடுதல் ஆகும்.  விவசாயத்திற்கான வங்கிக் கடன் ரூ.6 ஆயிரத்து 4.76 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.3 ஆயிரத்து 539.00 கோடி குறு கிய கால விவசாயக் கடனாகும். சிறு, குறு தொழில்களுக்கு ரூ.920.90 கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நா.அருள்ஜோதி அரசன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) அ.பாமா புவ னேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.ஸ்ரீனிவாசன், இணை இயக்குநர் (வேளாண்மை) கே.கணேசன், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் வி.சகுந் தலா மற்றும் தாட்கோ பொது மேலா ளர் கே.பாலமுருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

;