districts

img

குடிநீர் சாலை வசதி கேட்டு சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.

குடிநீர், சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் சின்னேரி வயல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர 26வது கோட்டம் சின்னேரிவயல்காடு பகத்சிங் தெருவில் வசிப்பவர்களுக்கு 45 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள்  சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி உதவி ஆணையர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் இணைப்பு கொடுப்பதாகவும், 15 நாட்களில் கிடப்பில் உள்ள சாக்கடை மற்றும் சாலை அமைக்கும் பணியை முடித்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இந்த போராட்டத்தில், சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், வாலிபர் சங்க மாநகர தலைவர் சதீஷ்குமார் மற்றும் மாநகர செயலாளர் குருபிரசன்னா , சிபிஎம் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல், ராஜேஷ்குமார் கிளை செயலாளர்கள் ரம்யா, ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

;