districts

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் - ஆட்சியர் தகவல்

சேலம், நவ .28- தமிழக அரசின் சார்பில் “உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்” செயல் படுத்தப்பட உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரி வித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளதாவது, உழவர்களுக்கும் விரிவாக்க அலுவ லர்களுக்கும் உள்ள தொடர்பை வலுப் படுத்தும் விதமாக தமிழக அரசு “உழ வர் அலுவலர் தொடர்புத் திட்டம்” என்ற திட்டத்தை இந்த ஆண்டு முதல்  செயல்படுத்துகிறது. இதில், விவசாயி கள் இருக்கும் கிராமத்திற்கே செல்லும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து அவர்கள் பின் பற்றபட வேண்டிய நவீன தொழில் நுட்பங்கள், பூச்சி நோய் தாக்குதல் நில வரம், உரமிடுதல், இதர சாகுபடி பணி கள் தொடர்பான பிரச்சனைகள், வானிலை முன்னறிவிப்பு, விவசாயிக ளுடன் கலந்தாய்வு, பயிற்சி போன்ற பணிகளை மேற்கொள்வர். மேலும் வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக ஊட கங்கள் மூலம் குழுக்களை உருவாக்கி முக்கியமான தொழில் நுட்பங்கள், செய்திகளை விவசாயிகள் அறிந்திடும் வண்ணம் செயல்படுத்தப்படும். எனவே, விவசாயிகள், தமிழக அர சால் செயல்படுத்தப்படும் இந்த உழ வர் அலுவலர் தொடர்புத் திட்டத்தில் பங்கேற்று தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளை யும், தொழில்நுட்பங்களையும், பயிற்சி களையும் மற்றும் அரசு நலத்திட்டங்க ளையும் சரியான தருணத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டு மென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.

;