சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கல்லூரியின் வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி தலைவர் வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா, கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.