districts

img

30 ஆண்டுகளாக வஞ்சிக்கப்படும் உளித் தொழிலாளர்கள் நிவாரணம் கேட்டு சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், நவ. 24- தமிழக கனிம நிறுவனத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக வஞ்சிக் கப்படும் உளித் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் கேட்டு மேட் டூரில் கனிம நிறுவன அலுவலகம் முன்பு சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக கனிம நிறுவனம் மூலம் வெட்டி எடுக்கப்படும் கிரைனைட் கற்களை வெட்டி வடிவம் கொடுப்ப வர்கள் உளித் தொழிலாளர்கள். இவர் களைக் கனிம நிர்வாகம் 1990 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கியது. இதனை எதிர்த்து பணி வழங்கவும், அதுவரை நிவாரணம் வழங்கவும் சிஐ டியு சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. தொழிலாளர்க ளுக்கு ஆதரவான தீர்ப்பு வந்த போதும், கனிம நிர்வாகம் அடுத்தடுத்து உச்ச நீதி மன்றம் வரை மேல்முறையீடு செய் தது. உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்ற தீர்ப்பை ஏற்க அறிவுரை வழங்கியது. அதன்படி, உடனடியாக தொழிலாளர் களை அடையாளம் கண்டு இடைக் கால நிவாரணம் ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை நிவாரணம் வழங்காமல் நிர்வாக அதிகாரிகள் காலம் தாழ்த்தி வரு கின்றனர். எனவே, உயர்நிதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம்,  மேட்டூரிலிருந்து ஊர்வலமாகச் சென்று கனிம நிறுவன அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் நிர்வாகி என்.சின்னதம்பி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் செ. கருப்பண்ணன்,  சிஐடியூ மாவட்டப் பொருளாளர் வீ.இளங்கோ, நடரா ஜன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட உளித் தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.

;