districts

img

முன்னுரிமை அடிப்படையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கிடுக அமைச்சரிடம் சிஐடியு வலியுறுத்தல்

சேலம், மே 15- முன்னுரிமை அடிப்படையில் ஏற்காட் டில் சாலையோரமிருந்த வியாபாரிகளுக்கு விரைந்து கடைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் சிஐடியு சார்பில் மனு அளிக்கப்பட்டது.   சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளின் தேவை களை பூர்த்தி செய்ய ஆங்காங்கே சிறு, சிறு  சாலையோர கடைகள் அமைத்து அப்பகுதி பொதுமக்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக சாலை யோரமிருந்த கடைகளை மாவட்ட நிர்வா கம் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதை யடுத்து சிஐடியு சாலையோர வியாபாரிகள்  சங்கத்தின் தலைமையில் பல கட்ட போராட் டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு ஏற்காட்டில் ஆய்வு மேற்கொண்ட போது, அவரை சிஐடியு மாவட்ட செயலா ளர் டி.உதயகுமார் தலைமையிலான சாலை யோர வியாபாரிகள் சந்தித்து, தங்களின் வாழ்வாதாரம் இந்த சாலையோர வியாபார கடைகளை நம்பிதான் உள்ளது. எனவே, இப் பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இதைக்கேட்ட அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காட்டில் சாலையோர வியபாரிகள் நடத்தி வரும் கடைகளை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 50க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள் ளது. அதற்கான டெண்டரில் முன்னுரிமை அடிப்படையில் முதலில் சாலையோர வியா பாரிகள் கடைகளை எடுக்கலாம். மீதமுள்ள  சாலையோர வியாபாரிகள் கடைகளை  நடத்த ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் சிறு தொகை கட்டிவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்திக்கொள்ள லாம் என உறுதியளித்தார்.

அதிகாரிகள் மெத்தனபோக்கு
ஆனால், அமைச்சர் வாக்குறுதி அளித் தும் இதுவரை ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பாதை யோர வியாபாரிகளுக்கு உரிய இடம் வழங் கவில்லை. தற்போது ஏற்காடு கோடை விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதா ரம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. எனவே, சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடைகள் வைக்க உரிய இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என வலியு றுத்தி சேலத்திற்கு வந்த நகர்புற அமைச்சர் கே.என்.நேருவிடம், சிஐடியு மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகி கள் பலர் மனு அளித்தனர்.

;