districts

img

60 லட்சம் காலிப் பணிகளை நிரப்பக்கோரி புதுவையில் வாலிபர்கள் போராட்டம்

புதுச்சேரி, பிப்.15- ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களில் புதுச்சேரியில் காலியாக உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்க ளை உடனடியாக நிரப்ப வேண்டும்.  அதிகரித்துவரும் சமூக குற்றங்களுக்கு காரணமாக உள்ள வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், பிரதேச செயலாளர் ஆனந்த் நிர்வாகிகள் சஞ்சய், லீலாவதி, கௌசிகன், ரஞ்சித், ராஜ்குமார், ஜெயராஜ், நவீன், மேடே, செல்வராசு, ஜான்குமார், கிருஷ்ணமூர்த்தி, நிலவழகன், உட்பட திரளான வாலிபர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.