districts

img

ஆரணி ஆற்றின் கரை உடைந்து 2000 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம்

பெரும்பேடு குப்பத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. தனிநபர் கழிவறைகள் இல்லாததால் பெண்கள் வெட்ட வெளியில் இயற்கை உபாதை களை கழிக்க ஆற்றங்கரை ஓரம் ஒதுங்கும் அவலம் தொடர்கி றது. பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும்   திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ள ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளி கட்டிடம், அதுவும் தனியார் நிறுவனத்தால் 30 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த கட்டிடமும் பாழடைந்து மாட்டுத்  தொழுவமாக மாறியுள்ளது.சுடுகாடும் ஆற்றின் உள்ளே உள்ளதால் வெள்ளப்பெருக்கு காலத்தில் வெளியூர்களுக்கு எடுத்து சென்றுதான் அடக்கம் செய்யப்படுவதாக கூறுகின்றனர். சுடுகாட்டு பாதையும் சேறும் சக்தியுமாக உள்ளது.10-அடி ஆழத்தில் நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. ஆற்றில் உள்ள மணலை  ஒட்ட சுரண்டி எடுத்ததால், நிலத்தடிநீர் உப்புநீராக மாற்றியுள்ளனர். இப்படி மனித இனம் வாழவே தகுதியற்ற கிராமமாக இருக்கி றது. ஏன் தான் இந்த ஊரில் வாழ்கிறோமோ என பெண்கள் வேதனை யுடன் கூறுகின்றனர்.

திருவள்ளூர், டிச. 1- பொன்னேரி அருகில் உள்ள பெரும்பேடு குப்பத்தில் ஆரணி ஆற்றின் கரை உடைந்து சுமார் 2000 ஏக்கரில் விளைவித்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்ணித் மலைப்பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் அணையை கடந்து,  தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழி யாக லட்சுமிபுரம் அணைக் ்கட்டை வந்தடைகிறது. அங்கிருந்து  பழவேற்காடு வழியாக சென்று வங்க க்கடலில் கலக்கிறது.  ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கர் பரப்ப ளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் மற்றும் பாலீஸ்வரம் ஆகிய இரண்டு பகுதிகளில்  மட்டும் தான் தடுப்பணைகள் உள்ளன. இதில் தலா 5,000 கன அடி தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடியும் என்கிறார்கள்.

ஆனால் இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவை பொருத்து 7 முதல் 12 டிஎம்சி தண்ணீர் வரை வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த காலங்களில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகு வாக குறைந்து தற்போது பெரும்பேடு குப்பம், வஞ்சிவாக்கம், சோமஞ்சேரி, பிரளியம்பாக்கம், ஆகிய பகுதிகளில் நிலத்தடிநீர்,  உப்புநீராக மாறியுள்ளது. மூன்று போகம் விளைந்த நிலத்தில் தற்போது ஒரு போகம் பயிர் செய்வதே கடினமாக இருக்கிறது. அதுவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போதும் பெரும்பேடு குப்பத்தில் ஆற்றின் கரை சுமார் 100-மீட்டர் அளவிற்கு உடைந்து  பயிர்கள் அடித்துச் சென்றுள்ளது.  வெள்ளம் வந்த வேகத்தில்  6-அடி ஆழத்திற்கு மண் அடித்து சென்றுள்ளது, இதனால் அடுத்த போகமும் பயிர் செய்ய முடியாது.

 நிலத்தை எப்படி சமன் செய்வது என தெரியவில்லை என்று வசந்தா, பாலகிருஷ்ணன், சிவலிங்கம் ஆகிய விவசா யிகள் மனம் குமுறுகின்றனர். ஆரணி ஆற்றை முறையான பராமரிக்காததால்  ஆற்றின் பல பகுதிகளில் வனம் போல்,  சீமை கருவேல மரங்கள் முளைத்தும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியே ற்றப்படும் கழிவுநீர் மற்றும் குப்பைகள்  கொட்டும் இடமாக மாற்றியுள்ளனர்.இதனை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சிபிஎம் வேண்டுகோள் இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.விஜயன், பொன்னேரி பகுதி செய லாளர் எஸ்.இ.சேகர், கட்டு மான சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் ஆகியோர்  செவ்வாயன்று (நவ30) பெரும்பேடு குப்பத்திற்கு சென்று பாதிக்க ப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆரணி  ஆற்றை முறை யாக தூர்வாரி  ஆற்றின் குறு க்கே 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையும்,100 அடிக்கு ஒரு ஆழ்தூளை கிணறு அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரி க்கை விடுத்தும் பலனில்லை. பெரும்பேடு குப்பத்தில் பெண்கள் கழிப்பறை இல்லாமல் தவிக்கின்றனர். அங்கு திறக்கப்படாமல் உள்ள பொது கழிப்ப றையை திறக்க வேண்டும், ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளிக்கு  அரசு புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும், சுடுகாட்டுப் பாதையை சீரமைக்கவேண்டும், ஆற்றின்கரையை பலப்படுத்த வேண்டும், வீடுகள், விவசாய விளை நிலங்கள், கால்நடைகள் என ஏராளமாக பாதித்துள்ளது.இவற்றை முறையாக அதிகாரிகள் கணக்கெடுத்து போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

;