சென்னை, செப். 2 - வேளச்சேரி விஜய நகரில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை விரைந்து திறக்க வேண்டு மென்று கோரிக்கை எழுந்துள்ளது. வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழி சாலைகளை இணைத்து ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி 2016ம் ஆண்டு 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2018 செப்டம்பரில் மேம் பாலத்தை கட்டி முடித் திருக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல், குழாய்கள் மாற்றி அமைத் தல், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பாலப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. திமுக ஆட்சி பொறுப் பேற்ற பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தர மணி சாலையையும் - வேளச்சேரி புறவழிச் சாலையும் இணைக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டது. அதேசமயம் வேளச்சேரி புறவழிச் சாலையையும், தாம்பரம் - வேளச்சேரி சாலையையும், இணைக் கும் மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பாலத்தின் மேல் தார்ச் சாலைகள் அமைத்து, இரு பக்கமும் மின் விளக்குகள் பொருத்தி, தூண், சுவர்களுக்கு கண்களை கவரும் வகையில் வண்ணம் பூசப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு மேம்பாலம் தயார் நிலையில் உள்ளது. இது தொடர்பாக பயணி ஒருவர் கூறுகையில், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவும் வேளச்சேரி புற வழிச்சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலையை இணைக்கும் மேம்பால பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகிறது. வாகன ஓட்டிகளின் அவதியை புரிந்து கொண்டு, காலம் தாழ்த்தாமல் மேம் பாலத்தை திறந்து விட வேண்டும்” என்றார்.