கடலூர்,அக்.9- தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் கலைப்பயண பிரச்சார வரவேற்பு கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. கடலூர் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.மாதவன், விசிக நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கடலூர் மாநகராட்சி துணை மேயர்பா.தாமரைச் செல்வன், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் குளோப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஷேக் தாவூத், மாவட்ட செயலாளர் ரஹீம், குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் எம். மருது வாணன், பாலு.பச்சை யப்பன் பொதுநல இயக்கங் களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசி னர். தமிழக சமூக செயல் பாட்டாளர்கள் மற்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து மாநிலம் தழுவிய கலைப் பயணம் நடைபெற்று வருகிறது. இந்த கலைப்பயணத்திற்கு வரவேற்பு பொதுக்கூட்டம் கடலூர் ஜவான் பவன் அருகில் நடைபெற்றது.