மாமல்லபுரம், ஜூலை 20- மாமல்லபுரத்தில் வரு கிற 28-ந் தேதி ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி நடைபெற உள்ளதை யொட்டி மாணவர்கள் நேரில் பார்வையிட 38 மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க 155 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப் பட்டு உள்ளனர். இந்த வெளி யூர்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் எங்கு தங்குகிறார்கள்? எந்த அரங்கத்தை பார்க்கிறார் கள்? என்பது குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாமல்லபுரம் வந்தார். அவர் செஸ் ஒலிம்பியாட் நடை பெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை பார்வையிட்டார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பர சன், ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வின் போது அங்கு தயார் நிலையில் கம்ப்யூட் டரில் இணைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் செஸ் போர்டில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் செஸ் காய்களை நகர்த்தி பரிசோதனை விளையாட்டாக செஸ் விளையாடினர். அப்போது மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் டிஜிட்டல் போர்டின் பயன் பாடு குறித்தும் இணையத் தில் இணைந்து விளையா டும் புதிய தொழில்நுட்பம் குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.