வெள்ள நிவாரணம் கேட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை யால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நெல் பயிருக்கு வழங்க வேண்டும். மணிலா, உளுந்து, மக்காச்சோளம், பருத்தி, மர வள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கும், காய்கறிகள் தோட்டப் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த நிலங்களை சரிப்படுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் பலியான கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். அமெரிக்கப் படைபுழுவால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தொடர் மழையால் வேலையின்றி தவிக்கும் விவசாய தொழிலாளிக்கு ரூ.10,000ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தண்ணீர் சூழ்ந்த வீடு களுக்கு ரூ. 5000 வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சேதமடைந்த சாலைகளை பாலங்களை சீர்படுத்த வேண்டும். மழை-வெள்ள நீரில் மூழ்கி பலியானவர்களுக்கும், சுவர் இடிந்து உயிரிழந்தவர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஆகியோர் தலைமை வகித்தனர். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்டப் பொருளாளர் தஷ்ணாமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் கற்பனை செல்வம், சர வணன், மூர்த்தி, மகாலிங்கம், ஜெகதீசன், கரும்பு விவசாய சங்க செயலாளர் தென்னரசு, பஞ்சாசரம். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏழுமலை, மாவட்டப் பொருளாளர் செல்லையா, துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தமிழரசன், நெடுஞ்சேரலாதன், பொன்னம்பலம், வைத்தி பன்னிர் சிபிஎம் நகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தை தொடர்ந்து, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், விவசாய சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தார். விழுப்புரம் வடகிழக்கு பருவமழையால் முற்றிலும் அழிந்து போன நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும், மற்ற பயிர்களுக்கு உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகை யில் இழப்பீடு வழங்க வேண்டும். வீடு களில் தண்ணீர் புகுந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும், தொடர் மழையால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும். கோமாரி நோயால் இறந்துபோன கால்நடை களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், போர்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு, உடனடியாக தொகுப்பு வீடு முன்னு ரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் தொடர் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தின. மாவட்டத் தலைவர்கள் .பி.சிவ ராமன், வி.அர்ச்சுனன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன், அ.து.கோதண்டம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். மாவட்டச் செயலாளர்கள் ஆர்டி.முருகன், ச.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சு.வேல்மாறன், ராஜேந்திரன், என்.பழனி மற்றும் பலர் உரையாற்றினர். கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரயில் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாநில துணை செயலாளர் பி.டில்லி பாபு, முத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர் மற்றும் பலர் உரையாற்றினர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், ஏற்கனவே கொடுத்துள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.