districts

img

மாநில அளவிலான கைப்பந்து போட்டி விஐடி செல்வம் துவக்கி வைத்தார்

வேலூர், நவ.3-  வேலூர் விஐடியில் நடை பெற்ற மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை மாவட்ட கைப்பந்து அமைப்பின் பெருந்தலைவரும் விஐடி துணைத் தலைவருமான டாக்டர். ஜி.வி.செல்வம் துவக்கி வைத்தார்.  இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 27 மாவட்டங்களை  சேர்ந்த 582 ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இப்போட்டியின் துவக்க விழாவில், தமிழ்நாடு மாநில கைப்பந்து அமைப்பின் பொது செயலாளர் ஏ.ஜெ.மார்டின் சுதாகர், வேலூர் மாவட்ட கைப்பந்து அமைப்பின் தலைவர் டாக்டர்.என்.வி.தியாக சந்தன், துணைத்தலைவர் வி.வினோத் குமார், செய லாளர் கே.டி.லக்‌ஷ்மணன், பொருளாளர் டி.தினகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.