districts

விளம்பர தூதராக விஜய் சேதுபதி நியமனம்

சென்னை, அக்.13- ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் மற்றும் எல்இடி டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்க ளுக்கான முன்னணி நுகர்வோர் பிராண்டாக திகழும் லாயிட் பிராண்டின் தமிழகத்திற்கான விளம்பர தூதராக நடிகர் விஜய் சேதுபதி நிய மிக்கப்பட்டுள்ளார்.  தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாடிக்கை யாளர்களை சென்றடையும் வகையில் இந்த புதிய கூட்டணியை அமைத்தி ருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய விளம்பரத்தையும் இந்நிறுவனம் வெளி யிட்டுள்ளது. தனது புதுமையான தயாரிப்புகள் மற்றும் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி யில் லாயிட் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள நுகர்வோருடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கும் என்று ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யோ கேஷ் குமார் குப்தா கூறி னார்.