புதுச்சேரி,நவ.1- தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடி வாரத்தில் உள்ள வாச்சாத்தி கிராம மக்கள் மீது நடந்த வன்கொடுமையை எதிர்த்து 30 ஆண்டுகால இடைவிடாத போராட்டத்தின் பால் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை நீதிமன்றத்தின் மூலம் கிடைத்துள்ளது. இந்த வெற்றி விழா கருத்தரங்கம் அகில இந்திய விவசாயிகள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சமம் பெண்கள் சுய சார்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புதுச்சேரி வில்லியனூரில் புதனன்று (நவ.1) நடை பெற்றது. இந்த கருத்தரங்க த்திற்கு இரகு.அன்புமணி, சரவணன், இளவரசி ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில் உரையாற்றிய விவ சாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சண்முகம், வாச்சாத்தி மக்கள் பட்ட துன்பங்களை எடுத்துரைத்தார். வாச்சாத்தி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் இடைவிடாத சட்டப் போராட்டம்தான் குற்றவாளி களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்தது என்றும் அவர் கூறினார். விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சங்கர், துணைத் தலைவர் பத்ம நாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கொளஞ்சியப்பன், செய லாளர் சரவணன், மாதர் சங்க நிர்வாகிகள் முனி யம்மா, சத்யா, சிவகாமி, மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.