districts

img

வி.பி.சி. நினைவு தினம்...

தொழிற்சங்க மூத்தத் தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 36ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரங்கன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜாபர் சாதிக், சிஐடியு நகர கன்வீனர் ஜி.கேசவன், ஜோதி, ரவி, சிவசீலன், வெங்கடேசன் (வாலிபர் சங்கம்), எஸ்.முத்து (போக்குவரத்து), சரவணன் (நகராட்சி ஊழியர் சங்கம்), காமராஜ் (விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவண்ணாமலை மாவட்டக் குழு அலுவலகத்திலும் வி.பி.சிந்தன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், எஸ்.ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் குமரன், நிர்வாகிகள் சிவாஜி, சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்க மூத்தத் தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 36ஆவது நினைவு தினத்தையொட்டி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு “போக்குவரத்தை பாதுகாப்போம்” என்று துணைத் தலைவர் கே.முருகன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மத்திய சங்க பொருளாளர் கே.சுந்தரபாண்டியன், செயலாளர் வி.சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.