districts

img

நெறிமுறை ஆய்வகத்தை தொடங்கியது யூனியன் பேங்க் ஆப் இந்தியா  

சென்னை, செப். 29- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா  ‘எத்திக்கல் ஹேக்கிங் லேப்’ (நெறிமுறை ஆய்வகம்) என்ற ஆய்வகத்தை  தொடங்கியுள்ளது  ஹைதராபாத்தில் உள்ள இணைய பாதுகாப்பு மேன்மைமிகு மையத்தில் நெறிமுறை ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.  இணைய பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவதே இந்த தனித்துவமான முன்முயற்சியின் நோக்கமாகும். வங்கியின் தகவல் அமைப்புகள்,  டிஜிட்டல் சொத்துக்கள், போன்றற்றுக்கு எதிரான  இணைய  அச்சுறுத்தல்களை தகவல் தொழில்நுட்ப முறைகேடுகளை தடுக்க இந்த ஆய்வகம் உதவும்.இதனை  வங்கியின் மேலாண்  இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான மணிமேகலை திறந்துவைத்தார். வங்கியின் செயல் இயக்குநர்கள் நித்தேஷ் ரஞ்சன்,  ரஜ்னீஷ், நீது சக்சேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த ஆய்வகம் குறித்து ஏ.மணிமேகலை கூறுகையில், “யூனியன் வங்கி மிகப்பெரிய அளவில்  டிஜிட்டல் தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது என்றார். இந்தப்  பின்னணியில், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த நெறிமுறை ஹேக்கிங்  ஆய்வகத்தை நிறுவியுள்ளது என்றும் அவர் கூறினார்.

;