சென்னை, ஜன. 13 - மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி கிளை உறுப்பினரும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளை முன்னணி ஊழியர் தோழர் வீ.ஆனந்தன். விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியின் 24வது மாநில மாநாடு செந்தொண்டர் அணிவகுப் பில் வந்தபோது மாரடைப்பால் காலமானார். தோழர் வீ.ஆனந்தனின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் ஞாயிறன்று (ஜன.12) பல்லாவரம் குளத்துமேட்டில் நடை பெற்றது. உருவப்படத்தை திறந்து வைத்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்மு கம் பேசியதாவது: கட்சியில் உயிரோட்டமாக செயல்படும் தோழர்கள், கட்சிப்பணி செய்து கொண்டி ருக்கும்போதே இறந்துவிட வேண்டும். போராட்டத்தில் இறக்க வேண்டும் என்று கூறு வார்கள். அந்த வகையில் தோழர் வீ.ஆனந்த னின் மரணம் மகத்தானது என்றாலும் கூட, அவர் மரணமடையக் கூடிய வயதில்லை என்பதால் ஏற்க முடியவில்லை. அவரது இழப்பு கட்சிக்கு பேரிழப்பு. ஒரு சிறந்த செயல்வீரரை உருவாக்க எத்தனையோ தோழர்கள் உழைப்பும் நேர மும் செலவிடப்படுகிறது. நீண்டகால செயல் பாடு அனுபவத்தின் காரணமாக ஒருவர் சிறந்த ஊழியராக மேம்படுகிறார். பக்குவ மடைந்து இருக்கும் நிலையில் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டிய நேரத்தில் நடந்த இந்த இழப்பை ஏற்க முடியவில்லை. எனவே, உடல்நலம் பாதிக்கப்பட்டால் கட்சித் தோழர்கள், முன்னுரிமை கொடுத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மின்வாரிய ஊழியராக இருந்தாலும், பணி செய்யும் இடத்தோடு நின்றுவிடாமல், பகுதியளவில் கட்சியின் முன்னணி ஊழி யராகவும், முன்னுதாரணமாகவும் செயல் பட்டார். பகுதி மக்களோடு இரண்டற கலந்து நின்றார். அணிவகுப்பில் உயிரிழந்த அவருக்கு கட்சியின் மாநாட்டில் பிரதிநிதி கள் அஞ்சலி செலுத்தினர். அவரது மகனுக்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு நிரந்தர தன்மையுள்ள வாரிசு வேலையை வாங்கி தரும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பி னர் கே.வனஜகுமாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சி.பிரபாகரன், ஏ.முரு கானந்தம், ம.தயாளன், எம்.ஹெலன் தேவ கிருபை, டி.பண்டாரம்பிள்ளை, பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், கே.சுந்தர் ராஜ், மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், விசிக செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் கேது (எ) தே.தென்ன வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.