districts

img

இதயம் துடிக்கும் போதே இரண்டு அறுவை சிகிச்சைகள்!

சென்னை, ஜன.6- சென்னை சூளைமேட் டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மிக சிக்கலான மிக அரிய அறுவைசிகிச்சை ஒன்றை நிகழ்த்தியதாக அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல் லூரைச் சேர்ந்த 61 வயதான நோயாளி ஒருவருக்கு உயிருடன் உள்ள ஒருவரிட மிருந்து கல்லீரலை தான மாகப் பெற்று கல்லீரல் மாற்று  அறுவைசிகிச்சையும் இதயம் துடிக்கும் போதே இதய ரத்த நாள பைபாஸ் அறுவைசிகிச்சையையும் ஒரே நேரத்தில் செய்யப் பட்டது. 18 மணி நேரம் நீடித்த இந்த அரிய இரட்டை அறுவைசிகிச்சையை பல்வேறு மருத்துவப் பிரி வுகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் நிகழ்த்தி யதாக    மருத்துவக் குழுவை  வழிநடத்திய எம்ஜிஎம் ஹெல்த்கேரின் டாக்டர் தியா கராஜன்  ஸ்ரீனிவாசன் மற்றும்  டாக்டர் கைலாஷ் ஆகியோர்  கூறினர். “அறுவைசிகிச்சை யின் போதும் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நோயாளிக்கு மிகப் பெரிய  அளவில் ரத்த இழப்பு  இருந்தது. இதனால் அவருக்கு அறுவைசிகிச் சையின் போதும்  அதற்குப் பிறகும்  மாரடைப்பு, ஏற்படு வதற்கான அபாயம் இருந் தது.  இதனால் நோயாளிக்கு இதய பைபாஸ் அறுவைசி கிச்சையும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையும் ஒரே நேரத்தில் செய்யப்பட்டது என்றனர்.   இது குறித்து மருத்துவ மனையின் கல்லீரல் மாற்று  அறுவை சிகிச்சை பிரிவு இணை இயக்குநர் டாக்டர் கார்த்திக் மதிவாணன்  கூறு கையில், “கல்லீரல் நோயா ளிகள் அனைவரும் குறிப் பிட்ட கால இடைவெளியில் இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கல்லீரல் பிரச்னையுடன் இதய பிரச்னையும் இருந்தால் அது உயிரிழப்புக்கான அபாயத்தை அதிகரிக்கும் என்றார்.