districts

img

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கேபிள்கள், ஒயர்கள் அகற்றம்

சென்னை,அக். 11- பெருநகர சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும்  போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கேபிள்கள் மற்றும் அனுமதியின்றி அமைக் கப்பட்டுள்ள கேபிள்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் உபயோகமில்லாத கேபிள்கள்,  பொதுமக்கள் மற்றும் போக்கு வரத்திற்கு இடையூறாக உள்ள கேபிள் டி.வி., இன்டர்நெட் ஒயர்களை அகற்றி முறைப்படுத்தவும், மேலும், அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கேபிள்களை அகற்றவும் மின்துறை சார்பில்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஒரு மண்ட லத்தில் ஒரு வார்டு என ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் 15 வார்டுகளில் அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட மின்துறை பொறி யாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவாக  சம்பந்தப்பட்ட வார்டுக்கு சென்று உபயோக மில்லாத மற்றும் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் ஒயர்களை  அகற்றுதல் மற்றும் முறைப்படுத்துதல், மேலும், அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கேபிள்களை  அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இதுவரை 165.87 கி.மீ. நீள  கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் ஒயர்கள்  மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட் டுள்ளது என்று மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

;