சென்னை,ஆக. 1-
சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்வுக்காக 4, 10, 13ம் தேதிகளில், காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 76 வது சுதந்திர தினவிழா வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டையில் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார்.