districts

img

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பல இடங்களில் பேட்டரி சார்ஜ் வசதி இந்தியன் ஆயில் செயல் இயக்குனர் வி.சி. அசோகன் தகவல்

சென்னை, ஜன 26- இந்தியன் ஆயில் பொதுத்துறை நிறு வனம், எரிபொருள் சிக்கன நடவடிக்கை யாக மின்சார பேட்டரி வாகனங்களை உபயோகிக்க ஊக்கமளிக்க பல்வேறு மையங்களில் இந்தியன் ஆயில் சார்பில் பேட்டரி சார்ஜ் வசதியை நிறுவ உள்ளது என்று இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பிரிவு தலைவர் மற்றும் செயல் இயக்குனர் வி.சி. அசோகன் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  இந்தியன் ஆயில் பவன் வளாகத்தில் நடை பெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் ஊழியர்கள் இடையே பேசினார். இந்த விழாவில் இந்தியன் ஆயில் மண்டல சேவை பிரிவு செயல் இயக்குனர் கே. சைலேந்திரா கலந்து கொண்டார். செயல் இயக்குனர் வி.சி.அசோகன் பேசுகையில், பசுமை எரிபொருள் வருங்காலத்திற்கு முக்கியமானது ஆகும். இதற்காக பசுமை எரிபொருட்கள் விற்பனை துவக்க உள்ளோம். இந்தியன் ஆயில் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்சார வாகனங்கள் செயல்படுவதை ஊக்குவிக்க இந்தியன் ஆயில் சார்பில் பேட்டரி சார்ஜ் செய்யும் மையங்களை தமிழ்நாடு பகுதியில் முக்கிய இடங்களில் நிறுவ உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியன் ஆயில் பாதுகாப்பு படை வீரர்களும் டெரிட்டரி ராணுவ வீரர்க ளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர் நீண்ட நாள் பணியாற்றிய இந்தியன் ஆயில் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ராணுவ வீரர்களும் முன்னாள் ராணுவ வீரர்களும் கவுரவிக்கப்பட்டனர். இந்தியன் ஆயில் ஊழியர் குடும்பத்தினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

;