கிரிக்கெட் போட்டி: திருவள்ளூர் அணி வெற்றி
சென்னை, பிப். 10- தமிழ் கிரிக்கெட் அசோஷியேஷன் சார்பில் நடைபெற்ற 16 வயதிற்குட்டவர்களுக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி வெற்றி பெற்றது. டி.என்.சி.ஏ.,வின் மாவட்டங்களுக்கு இடையிலான 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு பி.ஆர்., தேவர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட அனைத்து மாவட்ட அணிகள் பங்கேற்றன. திரு வள்ளூர் - செங்கல்பட்டு அணிகள் மோதிய இறுதிப் போட்டி, ஆவடியில் உள்ள ஒ.சி.எப்., கிரி நகர் மைதானத்தில் நடந்தது. தொடர்ந்து, மூன்று நாட்கள் நடந்த போட்டிகள் முடிவில், 13 ரன்கள் வித்தியாசத்தில், திருவள்ளூர் அணி வெற்றி பெற்று, பி.ஆர்.தேவர் கோப் பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு ஓசிஎப் பொது மேலாளர் பி.எஸ். ரெட்டி கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைவர் என்.சீனிவாச ராவ், மேலாளர் ஏ.வி. லோக நாதன், மைதான பொறுப் பாளர் ஜி.கஜபதி, பயிற்சி யாளர் டி.எல். ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடற்கரை- செங்கல்பட்டு 44 ரயில்கள் இன்று ரத்து
சென்னை,பிப்.10- தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை யில் 44 மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்வே வழித் தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்ட வாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை, காஞ்சிபுரம் - கடற்கரை, திருமால்பூர் - கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
சென்னை,பிப்.10- கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருந்த பயணி கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். வந்த பேருந்தில் உள்ள இருக்கைகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட் டிருந்ததால் பயணிகள் கோபமடைந்தனர்.
எஸ்.சி.எஸ்.டி மக்களுக்கு காலதாமதமின்றி வங்கிக் கடன் வழங்க அறிவுறுத்தல்
விழுப்புரம், பிப்.10- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்க ளுக்கு தாட்கோ மூலம் பரிந்துரைக்கப்படும் கடன்களை வங்கிகள் தாமத மின்றி வழங்க வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன் அறிவுறுத்தி னார். விழுப்புரம் மாவட்டத் தில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு வழங்கப்படும் அரசு நலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய ஆதிதிரா விடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் பேசுகையில்,“ வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட 97 வழக்கு களில் 206 பேருக்கு தீருதவி தொகை, 24 பேருக்கு குடும்ப ஓய்வூதியம் என மொத்தம் ரூ.1 கோடியே 90 லட்சம் வழங்கப் பட்டுள்ளது”என்றார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த வர்களின் 9 வாரிசுதாரர்க ளுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறை மூலம் இணைய வழி பட்டா வழங்கப் பட்டதில் 4,932 நபர்கள் வீடு கட்டி வசித்து வருகின்ற னர். 1,920 நபர்கள் காலி மனைகளில் அனுபவம் செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். தாட்கோ மூலம் பரிந்து ரைக்கப்படும் கடன்களை காலதாமதமின்றி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று மாவட்ட தொழில் மையம் வாயிலாக மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறி வுறுத்தினார். இந்த கூட்டத்தில் திண்டி வனம் சாராட்சியர் திவ்யான்ஷி நிகம், விழுப்பு ரம் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் என்.விசு வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில் நிலத்தில் பாஜக அலுவலகம்: அதிகாரிகள் சீல்
சென்னை,பிப்.10- சென்னை மயிலாப்பூரில் பாஜக அலுவலகத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மக்களவை தேர்தலையொட்டி பாஜக தென்சென்னை மாவட்டம் சார்பில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் மக்களவை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பாஜக பொறுப்பாளர் ராஜா தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் வணிக ரீதியாக பயன்பாட்டுக்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் அதை இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
முன்னாள் டி.ஜி.பி.யின் முறையீடு மனு: நாளை தீர்ப்பு
விழுப்புரம், பிப்.10- பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து முன்னாள் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதம் விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராஜேஸ்தாஸ், 4 நாட்கள் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். இந்த வாதங்களை மாவட்ட நீதிபதி பூர்ணிமா பதிவு செய்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி இந்த மேல்முறையீட்டு வழக்கில் பிப்.12 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.