சிதம்பரம், ஜன. 28- சிதம்பரம் லால்கான் தெருவில் கடந்த 1870 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 1905 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டிடத்தில் முதல் பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானதால் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக் காலங்களில் ஆவ ணங்களை பாதுகாப்பதி லும், பத்திரப்பதிவு மேற்கொள்வதிலும் ஊழி யர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டது. இதுகுறித்து கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற கூட்டத்தொடரில் சிதம்பரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் பாண்டி யன் கேள்வி நேரத்தின் போது புதிய பத்திரப்பதிவுத் துறை அலுவலகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இதனையொட்டி ரூ 5.50 கோடி லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒருங்கிணைந்த வளாகம் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. பழைய அலுவலகத்தில் உள்ள கோப்புகளை சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான பணியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், திட்ட இயக்குநர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் ஏ. எஸ்.பி.ரகுபதி, நகர் மன்றத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.