districts

img

ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்காற்றை பதிவுசெய்யும் “சாதி வர்க்கம் விடுதலை” நூல் அறிமுக நிகழ்ச்சியில் தலைவர்கள் பேச்சு

சென்னை, பிப். 5- பி.ஆர்.பரமேஸ்வரன் நூலகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக் குழு சார்பில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் எழுதிய “சாதி - வர்க்கம் - விடுதலை” நூல் அறிமுகக் கூட்டம் சென்னை ஓட்டேரியில் சனிக்கிழமை (பிப். 4) நடைபெற்றது.  மாவட்டக் குழு உறுப்பினர் வீ.ஆனந்தன் தலைமை தாங்கினார். ராய புரம் பகுதிச்செயலாளர் எஸ்.பவானி வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜானகிராமன், நூல் ஆசிரியர் பி.சம்பத் ஆகியோர் பேசினர். வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அ.விஜய் நன்றி கூறினார். நூல் குறித்து தலைவர்கள் பேசுகை யில், 1990களில் நடைபெற்ற தென்மாவட்ட கலவரங்களுக்குள் இருந்த நுண் அரசியலை புரிந்து, சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக கனன்று எழுந்த தலித் எழுச்சியை உள்வாங்கி, “ஒற்றுமை” என்ற பொதுவான முழக்கமாக மட்டும் அல்லாமல் பிரச்சனையின் வேர்களை ஆய்ந்தறிந்து சாதிய ஒடுக்குமுறை சாய்ப்போம், மக்கள்ஒற்றுமை வளர்ப்போம் என்ற சரியான பார்வையை முன் வைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்றனர்.  மேலும் சாதியின் வேர்களை தேடுவதில் தொடங்கி சமகால விவாதங்களில் பங்கேற்பது வரை நம்மோடு நெருங்கி உரை யாடுகிறது. சாதியின் தோற்றம், பரிணாமம் குறித்தும் மிக எளிமையாக கட்டுரைகள் விளக்குகின்றன. வருணாசிரமம், கோத்திரங்கள், கோத்திர சகோதரத்துவம், வர்ண சகோதரத்துவம், சாதிகள் உரு வாக்கம், பஞ்சமர்கள், உட்சாதிகள், மதம், மனுதர்மம், தீண்டாமை என்று சமூக தளங்களில் நிகழ்ந்த மாற்றங்களை விளக்குகின்றன. மேலும் இந்த மாற்றங்கள் எப்படி பொருளியல் தளத்தில் சுரண்டல் முறைக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்பதை மிக அருமையாக கூறுகின்றன. சாதி என்பது வெறும் மேல் கட்டுமானம் அல்ல, அது பொருள் உற்பத்தி முறை மையின் உறவுகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் தெளிவாக இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு, சமூகநீதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட தளங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மூச்சுத் திணறி இருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயிர்க் காற்றை தந்தது என்பதும் அழுத்த மாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பேசினர். இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் எம்.ராமகிருஷ்ணன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;