districts

வடிகால் பணி முடிந்ததும் கட்டுமான கழிவுகள் அகற்றப்படும்

சென்னை, செப். 11- சென்னையில் மழைநீர் வடிகால் பணி முடிந்ததும் கட்டுமான கழிவு களை உடனே அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் ஏற்கனவே உள்ள 2,071 கிலோ மீட்டர் நீள முள்ள மழைநீர் வடிகால்களில் தேங்கி யுள்ள வண்டல்கள் மற்றும் இதர கழிவு களை அகற்ற சம்பந்தப்பட்ட பொறி யாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 1,350 கிலோ மீட்டர் மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2இன் கீழ் ரூ.277.04 கோடி மதிப்பில் 60.83 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடி மதிப்பில் 107.57 கி.மீ. நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடி மதிப்பில் 1.05 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிராதன பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடி மதிப்பில் 769 கி.மீ. நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதியுத வியின் கீழ் கோவளம் வடிநில பகுதி களில் ரூ.1714 கோடி மதிப்பில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 44.88 கி.மீ. நீளத்திற்கும் புதிய மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. மழை நீர் வடிகால்வாய் பணிகள் முடிந்ததும் கட்டுமானக் கழிவுகள் அகற்றப்படுத்தப்படும்.

;