விழுப்புரம்,ஜூலை16- விழுப்புரம் அறி ஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக் கமார் ஆகியோர் திரு நாவலூரில் கள ஆய்வு செய்தனர். அப்போது கோவிலின் உள்ளே அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலின் மேற்புறம் சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில் கல்வெட்டு இருந்ததை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டு சுவஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி என்று தொடங்குகிறது. இந்த கல்வெட்டு சோழர் மன்னன் முதலாம் பராந்தகனின் கல்வெட்டாகும்.