சென்னை, ஜூலை 16-
திருவொற்றியூர் வடக்கு மாட வீதி, செட்டி தெருவில் வசித்து வருபவர் நிர்மலா. இந்த வீட்டின் பாழடைந்த பால்கனி திடீரென இடிந்து அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. அப்போது அருகில் விளையாடிக் கொண்டு இருந்த நிர்மலாவின் 3 வயது பேரன் நவீன் கிஷோரின் தலையில் கட்டிடத்தின் கல் பட்டது. இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.