districts

img

திருநீர்மலையில் கோவில், அரசு நில ஆக்கிரமிப்பை மீட்டிடுக! தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை

சென்னை,ஜூலை 17 - திருநீர்மலை ஸ்ரீரங்க நாதர் பெருமாள் கோவில் நிலம், அரசு நிலத்தை ரியல் எஸ்டேட் முதலாளி ஒருவர் ஆக்கிரமித்துள்ளதை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. சங்கத்தின் தென் சென்னை புறநகர் மாவட்ட 10ஆவது மாநாடு ஞாயி றன்று (ஜூலை 17) திரு நீர்மலையில் நடை பெற்றது. இந்த மாநாட் டில், சுற்றுச்சூழலை பாதிக்கும் கிரஷர், குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும், குடிமனைப் பட்டா கோரும் மக்களுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும், தற்போதுள்ள நீர்நிலைகளை தூர் வாரி பராமரிக்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பி.வீரண் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இ. சேகர் வரவேற்றார். துணைச் செயலாளர் டி.கே.எஸ். மோகன் வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எம்.சந்திர னும், வரவு செலவு அறிக் கையை பொருளாளர் கே. அரும்புராஜனும் சமர்ப்பித்த னர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன், ஜி.விஜய லட்சுமி எம்.சி., விவசாயி கள் சங்க மாவட்டச் செய லாளர்கள் கே.நேரு (காஞ்சி புரம், ஜி. மோகனன் (செங்கல்பட்டு) ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளர் பி.டில்லிபாபு நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ரவி நன்றி கூறினார். சங்கத்தின் மாவட்டத் தலைவராக டி.கே.எஸ். மோகன், செயலாளர் எம். சந்திரன், பொருளாளர் பி. வீரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;